மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டு எதிர்க்கட்சி!

Report Print Steephen Steephen in அரசியல்
79Shares

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளுக்கு போட்டியிடும் யோசனையை சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எஸ்.எம்.சந்திரசேனவை நிறுத்துமாறு அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள், கூட்டு எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும், மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சிலரது பெயர்களும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட பல முக்கிஸ்தர்கள் முன்வந்துள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, எவ்வாறு போட்டியிடுவது, நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments