அமைச்சரவை அனுமதியின்றி சத்தோச மூலமாக அரிசியை இறக்குமதி செய்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
இந்த தகவல் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற ஆய்வுக்குழுவான கோப் குழு இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி அமைச்சரவை அனுமதியின்றி 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வெறும் ஐயாயிரம் தொன் அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியைக்கொண்டு மேலதிகமாக சட்டத்துக்கு புறம்பாக இந்த 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2014- 2015ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக அரசாங்கத்துக்கு 15.6 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளமையை கணக்காய்வாளர் நாயகமும் உறுதிப்படுத்தியுள்ளார்.