சமகால இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது அமெரிக்காவுடன் இரகசியமாக கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த வருடத்துடன் நிறைவு பெறுகிறது. அதனை நிறைவு செய்யாமல் நீடிப்பதற்கு இரு நாட்டு இராஜதந்திரிகளுக்கு இடையில் கடந்த 29ஆம் திகதி இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது பிரதான மூன்று விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுடன் இலங்கை விழிப்புணர்வுடன் செயற்படுதல், பாதுகாப்பு செயற்பாட்டு பரிசீலனை செய்தல் மற்றும் அமெரிக்க மெரியட் படையினருக்கு இலங்கையில் பழைமையான இடங்களை பார்த்துக் கொள்வதோடு பழைய கலாச்சார நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கு இடமளிப்பதே அந்த மூன்று விடயங்களாகும்.
கடந்த 10 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு அருகில் அமெரிக்கா மூன்று பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.