மே தினம் பற்றிய அறிவில்லாத அரசியல்வாதிகள்!

Report Print Kamel Kamel in அரசியல்
74Shares

மே தினம் பற்றி தற்போதைய அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்..

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மே தினத்தின் மெய்யான அர்த்தம் என்ன என்பது பற்றி பலருக்கு தெரியவில்லை.

1886ம் ஆண்டில் சர்வதேச மே தினத்தை வென்றெடுத்த உழைக்கும் வர்க்கம் பற்றியும் தெரியவில்லை.

மே தினத்தை கொண்டாட எந்தவொரு நிறத்திலான கொடியையும் கொண்டு வருமாறு அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் டலஸ் அழப்பெரும கூறியுள்ளார்.

இந்தக் கருத்து வெட்கப்பட வேண்டிய ஓர் கருத்தாகும்.

வெசாக் பௌர்ணமி தினம் பௌத்த கொடியைக் கொண்டே அனுட்டிக்கப்படும்.

வேறும் கொடியை கொண்டு அனுஷ்டித்தால் அது பௌத்த மதத்தை அவமரியாதை செய்வதாகவே அமையும்.

செம்மே தினக் கூட்டத்திற்கு வெறும் நில கொடிகளை கொண்டு வருமாறு கோருவது பொருத்தமற்றதாகும்.

இதன்மூலம் கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளது.

டலஸ் அழப்பெரும போன்றவர்கள் உழைக்கும் வர்க்கத்தை இழிவு படுத்தியுள்ளனர்.

இந்த அவமானங்களிலிருந்து மீள்வதற்கு உழைக்கும் வர்க்கத்தினர் ஜே.வி.பியுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி பச்சை மே தினம் பற்றி பேசுகின்றது.

மே தினத்தின் அர்த்தம் புரியாமலேயே இவ்வாறு பேசுகின்றனர் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

Comments