மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு சம்பிக்கவின் அலட்சியமே காரணம் : மேல்மாகாண முதலமைச்சர்

Report Print Aasim in அரசியல்
59Shares

மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் சம்பிக்க பொறுப்புகூற வேண்டும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார்.

குப்பைமலை அனர்த்தம் தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நேற்று(17) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குப்பைமலையில் இயற்கை உரம் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவும் நோக்கில் அப்பிரதேசத்தில் 60 ஏக்கர் காணியொன்றை ஒதுக்கித் தருமாறு கடந்த ஆண்டு தொடக்கம் பல்வேறு தடவைகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டுவிட்டார்கள்.

குப்பை மலையை அங்கிருந்து அகற்றுவதில் முதலமைச்சர்களின் பிரச்சினை இருக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களே பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தனர் என முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments