ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட அழைப்பு

Report Print Vino in அரசியல்
171Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் அழைப்பு விடுத்துள்ளார்.

வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அந்நாட்டு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்திற்கும் வியட்நாம் ஜனாதிபதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நல்லிணக்க தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் வியட்நாம் ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments