ராஜபக்‌ஸ ஆட்சி காலத்தில் கண்டுக்கொள்ளாத மீதொடமுல்லை விவகாரம்!

Report Print Nivetha in அரசியல்
61Shares

கோத்தாபய ராஜபக்‌ஸ மீதொடமுல்லை குப்பை விவகாரத்தில் பாதுகாப்பு செயளாலராக இருக்கும் போது ஏன் எந்த முடிவும் எடுக்க வில்லை என்று பிரஜைகள் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஹகலத்த ஹேட்டி ஆராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்‌ஸ மீதொடமுல்லை குப்பையை புத்தளத்திற்கு எடுத்து சென்று மீள் சுழற்சி செய்ய அவர் ஆட்சியில் இருந்த கடைசி 2 வருடத்தில் முடிவு செய்ததாக தகவல் வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் வழங்கவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் குப்பை விவகாரத்தில் அரசியல் செய்தார்களே ஒழிய தீர்வு வழங்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் புளுமெந்தால் பகுதியில் இருந்து மீதொடமுல்லை பகுதிக்கு தற்காலிகமாக குப்பை கொட்டப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தற்காலிகம் இன்றுவரையும் தொடர்கின்றது எனவும் இதன்போது பிரஜைகள் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஹகலத்த ஹேட்டி ஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சுமார் 40 வீடுகள் வரை சேதமாகியுள்ளன.

அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நேற்றை தினம் 28ஆக இருந்தோரின் எண்ணிக்கை இன்று 31ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குப்பை மலை சரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments