புதிய அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான துறைகள் விரைவில்

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சரவையில் நேற்றைய தினம் செய்யப்பட்ட மாற்றத்திற்கு அமைய அந்தந்த அமைச்சுக்களுக்கான துறைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அமைச்சுக்களில் பல்வேறு துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

தற்போது அமைச்சுப் பதவி வகித்து வரும் அமைச்சர்களின் சில துறைகளும் புதிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது அமைச்சர்களுடன் முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தாம் விரும்பும் வேறு அமைச்சர் ஒருவருடன் பணியாற்றுவது தொடர்பில் கோரிக்கையை முன்வைக்க ஐந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Comments