புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்திய மங்கள சமரவீர!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மங்கள சமரவீரவுக்கு, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் நன்றி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உறவை மேம்படுத்தியமைக்காக இம்மானுவேல் அடிகளார் நன்றி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மங்கள சமரவீரவை பாராட்டி, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'உங்கள் (மங்கள சமரவீர) புதிய பதவியை சிறப்பாக தொடர வேண்டும். வெளிவிவகார அமைச்சராக இலங்கைக்கு நீங்கள் சிறந்த பணியை ஆற்றியுள்ளீர்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தியமைக்கு நன்றி.

நாம் முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி அல்ல என நம்புகிறோம்' என்று இம்மானுவேல் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.

Comments