ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியா விஜயம்

Report Print Suky in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

3 நாள் விஜயத்தை கொண்ட இந்த பயணத்தில் அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரில் அந்த நாட்டு பிரதமர் மல்கம் டேன்புல் உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தை உட்பட கடலோர எல்லைப் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த விஜயத்தின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments