அமைச்சரவை மாற்றத்தின் பின் அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் திட்டமிடும் நோக்கில் அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் அலரி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments