மங்களவுக்கும் ரவிக்கும் ஆலோசனை வழங்கியுள்ள ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய அமைச்சுக்களைப் பொறுப்பேற்ற அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதே அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இருவரும் மேற்கொண்ட பணிகளை இதன்போது பாராட்டியுள்ள பிரதமர், புதிய அமைச்சின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக, வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments