அமைச்சரவை மாற்றம் குறித்து மஹிந்தவின் கருத்து

Report Print Shalini in அரசியல்

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் என்பது இந்த அரசின் பலவீனத்தையே காட்டுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 9 அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு அரசாங்கம் அமைக்கும் போது ஒரு கட்சியே அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இரண்டு கட்சிகள் இணைந்து அமைக்கும் போது உறுதியான தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை மாற்றத்தில் ஊழல் மோசடிக்காரர்களையே தொடர்ந்தும் அமைச்சர்களாக்கி உள்ளனர். இது இந்த அரசின் பலவீனத்தையே காட்டுகின்றது என குற்றம் சுமத்தினார்.

இந்த கூட்டு அரசாங்கத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. தலைமைத்துவ பிரச்சினை உள்ளது, அமைச்சுக்களில் முரண்பாடுகள் உள்ளன. அரசே உறுதியில்லாத நிலையில் நாட்டை எவ்வாறு உறுதியாக ஐக்கியப்படுத்தி கொண்டுசெல்ல முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Comments