மஹிந்தவின் புதல்வர் வெளிநாடு செல்ல அனுமதி !

Report Print Ramya in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு யோசித்த, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா செல்ல யோசித்த அனுமதி கோரியிருந்தார்.

இதேவேளை, பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட யோசித்த ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments