விலக்கப்பட்டார் மங்கள! ஹர்ஷ டி சில்வாவிற்கு வாய்ப்பு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறித்த சுற்றுப்பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கலந்து கொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சு பதவி நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுக்கு நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்திலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments