மற்றுமொரு போருக்கு இடம் இல்லை: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Ramya in அரசியல்

மற்றுமொரு போருக்கு இடம் இல்லை. நாட்டின் ஒற்றுமையை நோக்கிச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் முன்னேற்றம் என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திபில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பின் அந்த அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நாடு தற்போது அபிவிருத்தி குறித்து முன்னோக்கி செல்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது.

மேலும், இலங்கையில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க இந்தியா முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும், ஜப்பான் உதவி செய்ய முன்னோக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments