எதிர்காலத்திலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த மாற்றம் நிச்சயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
குற்றச்சாட்டு என்பது யாரும், யார் மீதும் முன்வைக்கலாம். ஆனால் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த அமைச்சரவை மாற்றம் என்பது மற்றவர்கள் கூறுவதைப் போன்று குற்றச்சாட்டுக்களால் மாற்றப்பட்டது அல்ல. காலத்தின் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சிரேஸ்ட, அரசியல் அனுபவமுள்ளவர்கள். இருவரும் தமது கடமைகளை சரிவர செய்வார்கள்.
அமைச்சரவை மாற்றம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட்டு வருகின்றது. இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. என குறிப்பிட்டார்.
இதில், “உங்களுக்கு மேலும் ஒரு அமைச்சுப்பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?” என அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “எனக்கு நல்ல அமைச்சுப்பதவி ஒன்றே உண்டு. வேறு பதவி வேண்டாம். இது போதும்” என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.