மஹிந்த தோற்பதற்கு காரணம் கோத்தபாயவின் இனவாத செயற்பாடுகளே!

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடையக் காரணம் என புதிய அரசியல் அமைப்பிற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்சவின் இறுதி காலப்பகுதியில் மஹிந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்த சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச போன்ற தலைவர்களின் தலைமையில் இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவே மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைய காரணமாகியது. பாணந்துறை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் முதலானவர்கள் மேற்கொண்ட போராட்டம் மஹிந்தவின் தேர்தல் தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மாறியது.

எவ்வாறெனினும் தெற்கின் சிங்கள பௌத்த மக்கள் முஸ்லிம் இனவாத அரசாங்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

எனினும் சில காரணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என வியாங்கொட தெரிவித்துள்ளார்.

Comments