கொழும்புக்கு நிகராக கொலன்னாவையை மாற்ற வேண்டும்

Report Print Shalini in அரசியல்

கொழும்பு, இராஜகிரிய, கடுவெல போன்ற இடங்களின் பெறுமதி கொலன்னாவ பிரதேசத்திற்கு இல்லை. இதற்கு காரணம் எமது பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தி என்பன முறையாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொலன்னாவ பிரதேசத்தில் உரிய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலேயே மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொலன்னாவ பிரதேசத்தில் காணிகளின் விலை குறைவு என்பதால் கொழும்பிலிருந்து ஏழை மக்கள் கொலன்னாவையில் வாழ்வதற்கு வருகின்றனர்.

இப்படி இருந்தால் எமது பிரதேசத்தை எவ்வாறு முன்னேற்றுவது? கொழும்புக்கு நிகராக எமது கொலன்னாவ பிரதேசத்தையும் முன்னேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றம் நடைபெற்று 2 வருடங்கள் ஆகின்றன. எமது பிரதேசத்தில் வாக்குகளை பெற்றவர்கள் ஒரு பாதையை சீர் செய்துள்ளார்களா? விகாரை, பள்ளி கோயில்களுக்கு உதவி செய்துள்ளார்களா? பாடசாலைகளுக்கு ஒரு கணினி கொடுத்திருக்கின்றார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments