மஹிந்தானந்தவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தில்!

Report Print Aasim in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் பொறுப்பேற்றிருப்பது குறித்து விசாரணை நடத்துவதாக சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான நிதிமோசடி வழக்கில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றம் பொறுப்பேற்பதை அனுமதிக்கப் போவதில்லை என்று அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து வெளியிட்டிருந்தார்.

அதனை இன்று நாடாளுமன்றத்தில் ஞாபகமூட்டிய கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, மஹிந்தானந்தவின் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்துள்ளார்.

இதனையடுத்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது குறித்து தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அவரது வாக்குறுதி மீறப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்து தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்களித்துள்ளார்.

Comments