ஒழுக்க விதிகளை மீறும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை : துமிந்த திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்படும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இது குறித்து தீர்மானித்துள்ளது என துமிந்த கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கண்டி கட்டம்பேயில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தினை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments