யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்

Report Print Ramya in அரசியல்

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று காலமானார்.

அப்பாத்துரை வினாயகமூர்த்தி, தனது 84 வயதில் இன்றைய தினம் காலமானார்.

இவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியும், சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

இதேவேளை, அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முன்னாள் தலைவராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நாளை மறுதினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.