கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டாரா மரிக்கார் எம்.பி?

Report Print Aasim in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தனது மாதச் சம்பளத்தை அனர்த்த நிவாரண நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி தனியான நிதியமொன்றை ஆரம்பித்துள்ளது.

இதற்காக அக்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத்தை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் தனது மாதச் சம்பளத்தை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

குறித்த நிதியத்தில் தனது மாதச் சம்பளத்தை வைப்புச் செய்யுமாறு அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அனர்த்த நிவாரண நிதியத்துக்கு மாதச் சம்பளத்தை அன்பளிப்பு செய்யாது அரசாங்க நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்த மரிக்காரின் செயல் அரசியல் வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.