அனைவருக்கும் சம அடிப்படையில் நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை

Report Print Kamel Kamel in அரசியல்

அனைவருக்கும் சம அடிப்படையில் நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் எவ்வித கட்சி பேதமும் இன்றி சம அளவில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலிக் சமரவிக்ரமவின் ஊடாக இந்த அறிவுறுத்தல்களை ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம மட்டத்திலான பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அரசாங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புக்களினால் வழங்கப்படும் நிவாரணங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமையகம் ஊடாக மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு மலிக் சமரவிக்ரம இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.