குற்றவாளிகளை பரிமாறுவதற்கு இலங்கையும் - சீனாவும் தயார்: உடன்படிக்கை கைச்சாத்திட முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளை அயல்நாட்டிற்கு பரிமாறுவதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் சீனாவில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்ற நபர்களை அந்நியோன்னிய ரீதியில் பரிமாறிக் கொள்வதற்கு உரிய இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பறிமாற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டயோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.