காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்களா?

Report Print Rakesh in அரசியல்

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அவர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளாரா என்பது தொடர்பில் அவரிடம் நேரடியாகக் கேட்கப்படும் இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது,

நாம் அந்த நேர்காணலை இன்னமும் பார்க்கவில்லை. அதனைப் பார்க்க வேண்டும்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவ்வாறு கூறியுள்ளாரா என்று கேட்ட பின்னர் தான் பதில் வழங்க முடியும் என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.