கோத்தபாய ராஜபக்ஷவிடம் மூன்று மணிநேர விசாரணை

Report Print Ramya in அரசியல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நேற்றைய தினம் மூன்று மணி நேர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினரே நேற்றைய தினம் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த கோத்தபாய,கீத் நொயார் கடத்தப்பட்டதை அறிந்தாரா என்பது தொடர்பில் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,இந்த சம்பவம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவிடம் மீண்டும் ஒரு முறை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

2008ம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயா கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.