காப்புறுதி மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது: இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள காப்புறுதி திட்டத்தின் மூலம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏற்பட்ட இவ்வாறான அனர்த்தத்தின் போது காப்புறுதி திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

சீத்தாவாக்கபுர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இப்படியான இயற்கை அனர்த்தங்களை சரியான முறையில் முன்கூட்டியே அறிந்து கொள்வது சிரமமானது எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.