நான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியே : திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தமக்கு இன்றும் நேரடியாக அழைப்பு விடுக்கப்படாத போதும், தாம் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவரே என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டாக பிளவடைந்திருந்த கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சி எடுத்தமை காரணமாகவே, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் விலக நேர்ந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிக்கடுவையில் நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.