அலோசியஸின் குறுஞ்செய்தியில் ஆர்.கே. பி.எம்

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கி முறி தொடர்பான ஆணைக்குழு விசாரணையின் போது நேற்று முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசி குறுந்தகவல்களின் மூலம் அவர் அனுப்பிய செய்திகளில் ஆர்.கே மற்றும் பி.எம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று ஆணைக்குழுவுக்கு அறிவித்தது.

அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் 8600 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.கே என்றால் ரவி கருணாநாயக்க என அர்த்தம் கொள்ளப்படுகிறது.

எனினும் ஆர்.கே என்ற சொல் தம்மை குறிக்கிறதா? என்பது தமக்கு தெரியாது என்று ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.