ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தேச சட்டமூலம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தேச சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்டவாக்க குழுவினால் இந்த உத்தேச சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

1988ம் ஆண்டு இரண்டாம் இலக்க மாகாணசபை சட்டத்திலும் அரசியல் சாசனத்திலும் திருத்தங்கள் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.