கொழும்பில் கூடும் சர்வதேச பாதுகாப்புத்துறை பிரதானிகள்

Report Print Ajith Ajith in அரசியல்

பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆராயும் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு' ஓகஸ்ட் மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏழாவது தடவையாக நடைபெறவுள்ளது.

இதில் 700 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உயர்ஸ்தானிகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், சார்க் நாடுகளின் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கருத்தரங்குகள் இராணுவ பயிற்சி பணியகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவ தளபதியின் மேற்பார்வையில் இடம்பெறும் என இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பாதுகாப்பு கருத்தரங்கில்,

பூகோள வன்முறை தீவிரவாதம்,

தீவிரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு செயற்பாடுகள்,
கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு,
பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புகள்,
உலகளாவிய ஆளுகையில் செல்வாக்கு,
சட்ட பாதிப்புகள்,
நுண்ணறிவும் சைபர் சவால் மற்றும் வியூகம் ,
பாதுகாப்பு படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள் ,
ஐக்கிய நாடுகள் மூலோபாயம்,
உள் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள் மாநில உறவுகள் மற்றும் அதன் தீவிரவாத வன்முறை,
உலக நிர்வாகத்தில் இராணுவ செயற்பாடுகள்

எனும் தலைப்புகளில் கருத்தரங்குகள் இடம்பெறும்.