அம்பாறையில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது அம்பாறையில் திணைக்கள ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கிய நிதி தொடர்பாகவும், அதன் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.

அந்த வகையில் நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் அம்பாறை நகரை விரிவுபடுத்தல் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அனோமா கமகே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான றொபின், எம்.ஐ.மன்சூர், சிரானி, திஸ்ஸநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.