அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

Report Print Steephen Steephen in அரசியல்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அலுவலகத்தில் இன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.