நீதியமைச்சர் தனது பொறுப்பை சரியாக செய்ய வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் நீதியமைச்சர் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகள் குறித்த 88 விசாரணைகளை நடத்தி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதன் அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

எனினும் அவற்றில் 15 அறிக்கைகள் தொடர்பாக மாத்திரமே வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொலிஸாரிடம் பிரச்சினையில்லை.

சட்ட அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றிலேயே பிரச்சினைகள் உள்ளன எனவும் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.