பதவியை துறக்கவுள்ள அமைச்சர் விஜயதாச

Report Print Steephen Steephen in அரசியல்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த வாய்ப்புள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர் சம்பந்தமாக ஜனாதிபதி அல்லது பிரதமர் ஏதேனும் தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதியமைச்சரின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நீதியமைச்சர் குறித்து தீர்மானிக்க குழுவொன்றை நியமிப்பது என இதன் போது தீர்மானிக்கப்பட்டதுடன் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தீர்மானம் நாளை பிற்பகல் நடக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.