பிரதமரின் மட்டு. விஜயத்தை புறக்கணித்தார் ஹிஸ்புல்லாஹ்

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபைக்கான புதிய கட்டட திறப்பு நிகழ்வினை இராஜாங்க அமைச்சர் எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணித்துள்ளார்.

குறித்த கட்டட திறப்பு நிகழ்வு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும், பங்களிப்புடனும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை அரசியல் இலாபங்களுக்காக தன்னை புறக்கணித்து விட்டு திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நான் கலந்து கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டு விடும்.

எனவே, நான் இந்த நிகழ்வை புறக்கணிப்பதற்கான காரணம் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.