ஜனாதிபதியும், பிரதமரும் பௌத்த மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அஸ்கிரிய பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி, உடகுன்னாபான விஹாரை கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

விஹாரகைளை அமைப்பது குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு இயலாத காரியமாகும். விஹாரைகளை அமைப்பதற்கு அரசாங்கம் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது.

பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் மத்தியில் மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியைப் போன்றே முன்னாள் ஜனாதிபதியும் பௌத்த மதத்தை கட்டியெழுப்ப முயற்சித்திருந்தார் என அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

Latest Offers