முக்கிய அமைச்சர்கள் பலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவார்கள்! மஹிந்த

Report Print Aasim in அரசியல்

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கும் கருத்து முரண்பாடுகள் மற்றும் அதிருப்தி தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் விரைவில் அரசாங்கத்தை விட்டு விலகி கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அவர்கள் கட்டம் கட்டமாகவே அரசாங்கத்தை விட்டு விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அவ்வாறு எம்முடன் இணைந்து கொள்ளவுள்ள முக்கியஸ்தர்களின் பெயர்களை இப்போதே பகிரங்கப்படுத்தினால் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களைத் தடுத்து விடும் எனவும் மஹிந்த ராஜபக்‌ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers