மஹிந்த முன்னிலையில் தலைவரான ஹரின்!

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் பிரபல இசைக் குழுவின் 20வது ஆண்டு விழா தாமரை தடாக அரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மஹிந்த மற்றும் ஹரின் ஆகியோர் நான் அதிகமாக நேசிக்கும் அரசியல்வாதிகள் என இசைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு பொருத்தமான இளம் தலைவர் ஹரின் பெர்னாண்டோ என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.