மேல் மாகாணசபையில் இன்று 20வது திருத்தச் சட்டம்

Report Print Aasim in அரசியல்

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்துக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்று மேல் மாகாண சபையில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனினும் குறித்த சட்டமூலத்தை தோற்கடிக்கவுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயநாத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையில் 20ம் திருத்தச் சட்டததில் ஒரு ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுதந்திரக் கட்சியின் மஹிந்த சார்பு அணி அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றது

இந்நிலையில் மேல் மாகாண சபையின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான உறுப்பினர்கள் இங்கு அதிகமாக இருப்பதன் காரணமாக சட்டமூலம் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கும் ஜே.வி.பி. கட்சி மேல் மாகாண சபை வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.