ரவிக்கு ஏற்பட்ட மறதி நோய் ராஜிதவுக்கு தொற்றி விட்டது! நாமல் ராஜபக்ச

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்வுக்கு ஏற்பட்டிருந்த ஞாபக மறதி நோய் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த அணியினரை ஊழல்வாதிகள் எனக் கூறி அரசியல் செய்து வருகின்ற நிலையில், தற்போது அவர்களது ஊழல்கள் வெளியே வரும் போது விழி பிதுங்கி நிற்கின்றார்கள்.

அந்த வகையில் ராஜித சேனாரத்னவின் ஊழல் தொடர்பில் நாம் பேச ஆரம்பித்துள்ளது முதல் அவர் கலவரம் அடைந்துள்ளார்.

குற்றவாளிகளின் ஒரு சில வார்த்தைகளை வைத்து அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். ஊழல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது "அது தனக்கு மறந்து விட்டதாக" தெரிவித்துள்ளார்கள்.

இந்த மழுப்பலான பதிலையே குறித்த விடயத்திலிருந்து தப்பிக்க முயலும் பதிலாக நோக்கலாம்.

இதனைப் போன்றே முன்னாள் அமைச்சர் ரவி கருநாணாயக்கவும் தனது ஊழல் விடயத்தில் மாட்டிக்கொண்ட போது கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசானது யாராவது ஊழலில் மாட்டிக்கொண்டால் இப்படி கூற வேண்டுமென பயிற்சி வழங்கியுள்ளதா என்ற அச்சம் எழுகிறது.

ஒருவரிடம் தனது அமைச்சு காலத்தில் இடம்பெற்ற செயல்கள் தொடர்பில் யாராவது கேள்வியெழுப்பினால் அது தொடர்பில் குறித்த அமைச்சர் விளக்கமளிக்க கடமைப்பட்டவர்.

அமைச்சர் ராஜிதவின் இப்பதிலானது அவரின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

இப்படியானவர் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக உள்ளமையானது தற்போதைய அமைச்சரவையின் தரத்தை அறிந்து கொள்ள செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers