நல்லாட்சி சுதந்திரக்கட்சிக்கு எதிரானதல்ல: சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியமையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பவே இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers