சுதந்திரக் கட்சியில் இணைய விஜயதாஸவுக்கு தடைகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாஸ ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதில் தடைகள் இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய இரண்டு கட்சிகளை சேர்ந்த எவராவது ஒழுக்காற்று குற்றச்சாட்டில் நீக்கப்பட்டால்,அவரை இரு கட்சிகளில் எந்தக் கட்சியும் தம்முடன் இணைத்து கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாஸ ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட முடியும் என அமைச்சர் மகிந்த அமரவீர கூறியிருந்தார்.

மேலும் விஜயதாஸ ராஜபக்சவுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

விஜயதாஸ ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் மகரகமை தொகுதியின் அமைப்பாளருமாவார்.