மலையகத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மலையகத்தில் இருந்த தலைவர்கள் எவரும் பிரதேச செயலகங்களையோ பிரதேச சபைகளையோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை, தலவாக்கலை, டயகம பிரதான வீதிகளில் புனரமைக்கப்படவுள்ள அக்கரபத்தனை ஆக்ரோவா பாலத்தின் பணிகளை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமார் 30 கோடி ரூபா நிதியில் புனரமைக்கப்படவுள்ள குறித்த பாலங்களில் அக்கரபத்தனை பாலத்திற்கு 10 கோடி ரூபாவும், மன்றாசி நகரிலுள்ள பாலத்திற்கு 20 கோடி ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

மலையகத்தில் இருந்த தலைவர்கள் எவரும் பிரதேச செயலகங்களையோ பிரதேச சபைகளையோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

எமது கட்சி வந்த பிறகு தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளையும், பிரதேச செயலகங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்நிலையில், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுடன் கலந்தாலோசித்து தற்போது மலையகத்தில் பல பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நிகழ்வின் போது, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, எம்.ராம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதோடு, பொதுமக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.