புலிகளுடனான போரில் திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை தளபதி சின்னையா: அமைச்சர் வாழ்த்து

Report Print Steephen Steephen in அரசியல்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை இன்று உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கடற்படை தளபதியும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் நட்புறவாக கலந்துரையாடியுள்ளனர்.

கடற்படையை மேலும் வலுப்படுத்துவதன் தேவை உட்பட பல விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை அதிகாரியான சின்னையா, கடற்படை தளபதியாக பொறுப்பேற்றமை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் கடற்பாதுகாப்பை வலுப்படுத்தி, நாட்டின் கடற்படையினருக்கு தலைமைத்துவத்தை வழங்க ருவான் விஜேவர்தன தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.