நாசகார செயலுக்கு துணை போகும் அமைச்சர்! தடாலடி குற்றச்சாட்டு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தை ஒழிக்கும் முகவராக ராஜித சேனாரத்ன செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தை ஒழிக்கும் முகவராக ராஜித சேனாரத்ன செயற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் அமைச்சர் இந்த பிரேரணையின் பின்னணியில் மருந்து இறக்குமதி நிறுவன மாபியா இருப்பதாக கூறுகின்றார்.

எனினும் மருந்து நிறுவன மாபியாக்களுடன் ஒப்பந்தமொன்றுக்கு சென்றது அமைச்சரே. சர்வாதிகார நாடுகளின் மிகப்பெரிய மருந்து மாபியாக்கள் அமைச்சரின் பின்னணியில் உள்ளன.

இலவச சுகாதாரம் மற்றும் கல்வியை இல்லாது செய்ய முயற்சிக்கும் அந்த நிறுவனங்களின் முகவராக அமைச்சர் செயற்படுகின்றார். இந்த நாசகார செயலுக்கு அவர் துணைபோகின்றார் என்று தடாலடியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.