முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கொழும்பில் இன்று மாலை காலமானார்.

80 வயதான அஸ்வர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வர் கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமாக இருந்ததால், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னாள் அமைச்சர் அஸ்வரின் ஜனாசா இன்று இரவு தெஹிவளை பாதிய்யா மாவத்தை 4 ஆம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் புலமை பெற்ற ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதியாவார்.

ரணசிங்க பிரேமதாசவின் சிங்கள உரைகளை இவரே மேடைகளில் தமிழில் மொழிபெயர்த்து வந்தார்.

பிரேமதாசவின் இறப்புக்கு பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வந்த அஸ்வர், 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2014 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்தார்.

Latest Offers