மாகாண தேர்தல் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத்துக்கு இன்று அரசு கொண்டுவரும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் முடிவையே பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று காலை கூடிய பின்னர்தான் முடிவு என்னவென்பது தெரியவரும் எனக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமைகளை மாற்றியமைக்கும் விடயத்தில் கூட்டமைப்பு ஏற்கனவே கொள்கை அளவில் இணங்கியிருக்கின்றமையால் இன்று சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை ஆதரிக்கும் முடிவையே அது எடுக்கும் எனக் கருதப்படுகின்றது.