ஐ.தே.கட்சியின் இரு எம்.பிக்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

ஹேஷா வித்தானகே சப்ரகமுவ முதலமைச்சர் வேட்பாளராகவும் நாலக கொலோன்னே வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாலக கொலோன்னே பொலன்நறுவை மாவட்டத்தையும் ஹேஷா வித்தானகே இரத்தினபுரி மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.